Monday, June 28, 2010

ஹெட் லைட்டை லோ பீமில் போடுவதே இல்லை

நானும் ரொம்ப காலமா கவனிக்கிறேன், நம்ம ஊர்லே படிச்சவன் படிக்காதவன் எல்லோருமே கார், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெட் லைட்டை லோ பீமில் போடுவதே இல்லை. நகர சாலைகளில் லோ பீம் இல் தான் வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என்ற விதி படிக்காதவனுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். (ஓட்டுனர் உரிமத்தை நாம் காசு கொடுத்து வாங்கும் வரை இப்படித்தான் இருக்கும்) நன்றாக படித்து லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் அறிவு ஜீவிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள். நானும் பலமுறை டிம் டிப் போட்டுக்காட்டி வெறுத்து போய் ஹை பீம்லியே வாகனத்தை ஓட்ட ஆரம்பித்து விட்டேன். ஊரோடு ஒத்து வாழ்வதென்பது இதுதானோ? நல்ல நாடு நல்ல மாக்கள் சாரி மக்கள். இன்னும் 100 ஆண்டுகள் சென்றாலும் நாம் திருந்துவோமா என்பது சந்தேகமே.

2 comments:

Unknown said...

அண்ணே இப்பதான் புதுசா வண்டி ஓட்டுறீங்களா.. போகப்போக நீங்களும் பழகிக்குவீங்க..
நான் அப்படிதான் மாறிப்போனேன்..

Unknown said...

நன்றி, செந்தில்,
இது நீண்ட கால ஆதங்கம். இப்போதான் வெளிப்படுது. மத்தப் படி கடந்த 33 வருடமாகவே வண்டியை ஓட்டிகிட்டுதான் இருக்கேன். நிலைமை இப்போ இன்னும் மோசமாயிருக்கு. அதான்.

Post a Comment