Monday, February 7, 2011

nanRi http://vikkiulagam.blogspot.com/2011/02/vote.html

ஓ போடு ஓ போடு(!?)- vote முடியும் போடு!


10 Views

- இப்படிக்கு உயிரோட இருக்கும் மனுஷன் சொல்லிகொள்றது.









எவ்வளவோ பாத்த நீங்க இத எப்பவோ படிச்சு இருப்பீங்கன்னு நினைக்கிறேன். இருந்தாலும் ஒரு முறை முயற்சி செஞ்சி பாப்போமே.







இது வரைக்கும்......அதாவது 1961 -வது ஆண்டுல இருந்து இந்த 49 O பிரிவு நம்ம தேர்தல் ஆணைய நடைமுறைல இருக்குன்னு சொல்றாங்க. ஆனா, போன தேர்தல்ல தான் நமக்கு இது தெரியவந்தது எனலாம். அதுவும் ஒரு ஜோக்கர் அரசியல்வாதி(!), நடந்த ஒரு இடைத்தேர்தல்ல இந்தப்பிரிவுல ஓட்டுப்போட சொல்லி அதிகபட்ச ஓட்டு வாங்குனாரு(ஹி ஹி!!).



நான் சொல்ல வர்ற விஷயம் இதுதானுங்க. இதுவரை பல பேர பார்த்துட்டோம் மற்றும் தொடர்ந்து ஏமாந்துக்கிட்டே இருக்கோம். கடந்த முறை ஒரு பொது இயக்கம் தோன்றி துண்டு பிரசுரமா இந்த விஷயத்த பல நகர மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தாங்க. ஆனா வெற்றியடைய முடியல(தோத்துட்டோம்!).









காரணம் என்னனா இன்னும் இது ஓட்டளிக்கிற பெட்டில பொத்தானா வரல..........பாருங்க எப்படியெல்லாம் நம்மள கும்முராங்கன்னு. இன்னொரு விஷயம் தேர்தல் நடக்கும்போது அந்த வாக்கு சாவடில நீங்க யாருக்கும் ஓட்டளிக்க விரும்பல என்று சொல்லி அங்க இருக்க கொய்யா மன்னிக்கவும் அய்யா கிட்ட சொன்னீங்கன்னா உங்களுக்கு ஒரு படிவம் கொடுக்கப்படுமாம். அந்தப்படிவத்துல எந்த வேட்பாளருக்கும் ஓட்டு போட எனக்கு புடிக்கலன்னு சொல்லி எழுதிக்கொடுத்துடலாம்னு நம்ம தேர்தல் ஆணையம் சொல்லுது.



இந்த விஷயத்த கூர்ந்து கவனிச்சா நெறைய உள்குத்துகள் நமக்கு புலப்படுது அவைகள்:



1. இந்த மாதிரி படிவத்த கேட்ட உடனே அந்த அய்யா பாக்கற பார்வை (நொந்த மற்றும் சொந்த அனுபவம்!) இருடி இங்க இருந்து வெளிய போன உடனே தெலுங்கு படத்துல வர்ற மாதிரி நாலு நல்லவங்கள வச்சி ஏய்....ஏய்....ஏய்....அப்படின்னு சொல்லிட்டு சொய் சொய்ந்னு கத்தி பாசிடுவாங்கலோங்கர பயம் வர்றது சகஜம்.



2. துட்ட வாங்கிட்டு இந்த மாதிரி போட இயலாது.(ஏன்னா அங்க உக்காந்து இருக்க சாவடி(பூத்) ஏஜென்டுங்க நாளைக்கு நம்ம வீட்டுல வர்ற தண்ணி connection, current connection மற்றும் எப்படியெல்லாம் நம்மள தண்டிக்க முடியுமோ அத சரிவர செய்வாங்க.



etc............etc.........



பல விஷயங்கள்ல நாம ரொம்ப வெளிப்படையா நடந்துக்க முடியாது. எனவே மக்களே நமக்கு பிடிக்காத யாருக்கும் நாம ஓட்டு போடணுமா வேணாமா என்பதையும், அதே நேரத்துல பணநாயக அய்யோ அய்யோ ஜனநாயக கடமைல இருந்து நாம(!) தவறாம ஓட்டு போடணும்னா, முதல்ல அந்த பொத்தான் அந்த ஓட்டு இயந்தரத்துல வைக்கப்படனும்.









இத நாம எப்படி முன்னேடுதுப்போகப்போரோம்னு நெனச்சால யப்பா தலைய சுத்துது...........ஏதோ சேஷன் சாரு இருந்தாருன்னா பரவாயில்ல. இப்போ யாருப்பா அது ஓ நீயா.............இத்தாலியம்மா சுகமா ஹி ஹி!!





இதனால என்னா நன்மைன்னா, இப்போ ஒரு தேர்தல்ல இந்த வழியா வேட்பாளருக்கு deposit போக வச்சா மறுபடியும் நிக்க யோசிப்பாங்க. இது நமக்கு கிடைக்குற முத வெற்றி. அடுத்தது நல்ல வேட்பாளர சீக்கிரமே வர்ற தேர்தல்ல நாம தேர்ந்தெடுக்கலாம். இந்த மாதிரி செய்யறதுனால என்னா லாபம் தேர்தல் பணவிரயம்தானே என்று நினைக்கலாம். இப்போ வரைக்கும் அது தானே நடந்துட்டு இருக்கு. நல்லது நடக்கனும்னு நெனச்சி தேர்தல்ல நிக்கற எதாவது ஒரு வேட்பாளர காட்ட முடியுமா. இன்னைக்கு வந்த துக்கடா கட்சியெல்லாம் வேட்பாளருக்கு விண்ணப்பிக்கிறவங்க கிட்ட கேக்குற முதல் வார்த்த எவ்வளவு செலவு உங்களால பண்ண முடியும்?- இந்த நிலைமை மாறனும்னா முதல்ல அத்தன நாதரிங்களும் deposit இழக்கணும். அடுத்த தேர்தல்ல நல்ல வேட்பாளர்கள நாமே நிறுத்தி ஜெயிக்க வைப்போம்.









நாம என்னா செய்யப்போறோம்னு முடிவு பண்ணுங்க.....சீக்கிரத்துல தேர்தல் வரப்போகுது யாருக்கும் சும்மா இல்ல ஓட்டு, 49O வச்சி போடப்போறோம் வேட்டு.



கொசுறு: ஊத வேண்டியது என் கடமை. இல்லை நாங்க பொதகுழிக்கு தான் போவோம்னா யாரு யார தடுக்க முடியும்.

Friday, February 4, 2011

ஏ! தாழ்ந்த தமிழகமே...!

ஏ! தாழ்ந்த தமிழகமே...!


ஏதோ அரை மயக்கத்தில் வாக்களித்த ஒரு குற்றத்திற்காக..

முழுச் சுதந்தரத்தையும் அல்லவா இழந்துவிட்டு மூடர்களாகி நிற்கிறோம்.!

தன் வீடு, தன் பெண்டு, தன் பிள்ளை...என வாழ்ந்து,

இனமழியப் பார்த்திருக்கும் வீணர்களை விரட்டியடிக்கும் நேரமிது.

வீழ்ந்து விட்ட இனத்தின் இருளகற்ற,

விடியலின் ஒளிக்கீற்றை தன் தோளிலே சுமந்து...

தன்மானம் காக்க வரும் தலைவனின் திசை நோக்கி

இதோ..

காத்து கிடக்கிறது தமிழகம் ..


இது என் நண்பர் மணி அவர்களின் கடிதம்.

மணி சார்,

யாரந்த தலைவன்? ஜெயாவா? விஜயகாந்தா? சரத்குமாரா? கார்த்திக்கா? ராதிகாவா? சீமானா? விஜையா? குஷ்புவா? ரித்தீஷா? ராமராஜனா?  பாருங்கள். இந்த கேடுகெட்ட தமிழ் சமுதாயத்தை. அரிதாரம் பூசி சினிமாவில் அக்கிரம்களை தட்டிக் கேட்டு, ஒரே கதா நாயகன் 50 பேரை வெறும் கையால் வீழ்த்தும் இவர்கள் தான் நமது தமிழகத்தின் எதிர் கால நட்சத்திரங்கள். இவ்வளவு தீரமிக்க வீரமிக்க காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள், உதாரணமாக, விஜை,  அவர் படத்திற்க்கு தடங்கள் வந்த போது அவர் தியேட்டரில் புகுந்து எல்லோரையும் அடித்து துவம்சம் செய்து தன் படத்தை திரையிட்டிருக்கலாமே. ஏன் இந்த ஆட்டம்? ஏன் இவர்கள் தெய்வமாகிறார்கள்? எல்லாவற்றுக்கும் காரணம் அறிவிலியான இந்த தமிழந்தான். விஜயகாந்த் அழைக்கிறார் என்றால் ஒரு தரிதர்யம் பிடித்தக் கூட்டம், கருனா நிதி அழைக்கிறார் என்றால் ஒரு மானம் கெட்ட கூட்டம், ஜெயா அழைக்கிறார் என்றால் ஒரு ஈனமற்ற கூட்டம் என்று இப்படி கூடுகிறார்கள். இவர்களுக்கு வேறெ வேலை வெட்டியே இருக்காதா என்று ஒரு மலேஷிய தமிழர் கேட்ட போது அவமானத்தில் தலை குனிவது தவிர வேறொன்றும் எனக்கு தெரியவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் இலவசமாக பெற்றுக் கொள்கிறோம். எங்களுக்கு வேலையே இவர்கள் கூட்டத்துக்கு போவது மற்றும் அலுக்காமல் சளைக்காமல் பிள்ளைகளைப் பெற்று போடுவது மட்டும்தான் என்று நமக்கு தெரியும். (எதிர்காலத்தில் பிள்ளைகளையும் இலவசமாக பெற்றுத் தந்தால்  நம் தமிழனுக்கு 
சந்தோஷமே) அதை அவர்களிடம் சொல்ல முடியுமா? காறித் துப்புவார்கள். அப்புறம் அவர்களும் தமிழ் நாட்டில் இந்த தமிழன் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன என்று நினைப்பான். இந்த 21 ஆம் நூற்றண்டிலும் நமது வீரமிக்க, மிக பழைய உயர்ந்த கலாச்சாரம் கொண்ட தமிழ் சமுதாயம் இந்த யோக்கியர்கள் மீதுதான் நம்பிக்கை கொண்டுள்ளது. இப்படி இருக்கையில் தமிழன் உருப்படுவான் என்ற நம்பிக்கை எப்படி வரும்? இவர்கள் பின்னால் பன்றிக் கூட்டமாக அலையும் தமிழன் செத்தால் என்ன என்று மத்திய அரசு நினைப்பதென்ன எனக்கும் அதுதான் தோன்றுகிறது. நமது தமிழனுக்கு கொஞ்சமாவது சூடு சொரனை இருக்கனுமே?

Thursday, February 3, 2011

தமிழன் என்று சொல்லடா அவன் தலையை வெட்டிக் கொய்யடா என்று ஒரு கூட்டம் அலைகிறது

எனது முந்திய பதிவுக்கு பின்னூட்டம் இட்ட திரு Anonymousக்கு நன்றி.

எனது நண்பர் திரு மணியின் ஆதங்கம் தொடர்கிறது. நியாயமான ஆதங்கம். இது திரு சுசெந்தில் குமரன் பதிவை பார்த்த பிறகு அவர் எழுதியது.
என்னை பொறுத்தவரை முத்துகுமார் இறப்புக்குப் பின்தான் இலங்கையில் போர் வேகமெடுத்து தமிழர்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப் பட்டார்கள். இந்திய அரசின் முழு ஆதரவோடு. இதெற்கு முழுக் காரணமும் நமது தமிழர்களின் ஒற்றுமை இன்மைதான். சமயத்துக்கு தகுந்தார் போல் நமது அரசியல் கட்சித்  தலைவர்கள் தமிழனை உபயோகிப் படுத்திக் கொள்ளுகிறார்கள். நான் ராசா கைது பற்றி எழுதினால் எனது நண்பர் ஒருவர்
 ஏன் இவ்வளவு காண்டு ராசா மேல்? ஜெயலலிதாவிடம் ஏதாவது  உதன்படிக்கை போட்டுவிட்டாயா என்கிறார். விளையாட்டுக்குத்தான் என்றாலும் எவர் ஆட்சிக்கு வந்தாலும் இன்றைக்கு
தமிழனுக்கு உண்மையான உள்ள       உணர்வோடு எதையும் செய்ய யாரும் இல்லை என்பதுதான் உண்மை. திராவிட கட்சிகள் இப்போதாவது தமிழ் கட்சிகள் என்று பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நாம் ஏமாறும் வரை நம்மை ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். நாம்தான் சுதாரித்துக் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் எவன் கட்சி தொடங்கினாலும் அவன் பின்னால் ஒரு லட்சம் பேர் நிற்கிறார்களே.  அப்புறம் ஏன் ஏமாற்ற மாட்டான்? வேலை வெட்டி இல்லாத சோம்பேறிகள் நிறைந்து போய்விட்டார்கள். 
 
 
  http://susenthilkumaran.blogspot.com/2011/02/blog-post.html

நிருபமா ராவ் -- ராஜபக்சே என்ன பேசி இருப்ப்பார்கள் ? -- ஒரு நியாயமான யூகம்
ராஜா பக்சே :வாங்க நிரூ .. என்ன விஷயம் ?

நிருபமா :தெரியாத மாதிரி கேட்காதீங்க . நான் எதுக்கு வந்திருப்பேன்னு தெரியாதா ?

ராஜபக்சே : தெரியும் . ஆனா அத உங்க வாயால நீங்க அசடு வழிய சொல்லி கேட்டா, எங்களுக்கு நல்லா பொழுது போகும் இல்லியா ?

நிருபமா : ஆனாலும் ரொம்ப குறும்ப சார் நீங்க . சரி சொல்லுறேன் . கேட்டுக்குங்க . கோடை இரவுகளிலும் கடல்ல தண்ணி சுடாம இருந்தாலும் இருக்கும . உங்க ராணுவம் தமிழக மீனவர்களை சுடாம இருந்தது இல்ல . நீங்க அதை நிறுத்தணும்னு சொல்லத்தான் வந்தேன் .

ராஜபக்சே : மெய்யாலுமா ? சோனியா பாபி இப்படித்தான் சொல்லி விட்டுச்சா
நிருபமா : (மனதுக்குள் ) என்ட்ரா இதி சால பிராப்ளமுக உன்னாவு (வாய் விட்டு ) அது இல்ல சார் . நீங்க கொஞ்சம் அதை நிறுத்தணும்.
ராஜ பக்சே : கொஞ்சம்னா ... ஒரு நாளைக்கு ஒரு தமிழக மீனவன் என்பதை மாத்தி ஒரு வாரத்துக்கு ஒரு தமிழக மீனவன் ....ஒகே வா ?
நிருபமா : (தயங்கியபடி ) இல்ல சார் ... நீங்க .....ஒரு..... மூணு நாலு மாசத்துக்கு..... யாரையும் .....சுடவே... .....கூடாது

ராஜபக்சே : ( கோபாவேசத்தோடு ) என்னது ? என்ன நிரூ ... கிண்டலா ? எங்க உரிமைய நீங்க பறிக்கப் பாக்குறீங்களா ?
தன் இனம் சாவும்போடும் காசு வாங்கிக்கிட்டு தேர்தல் விபச்சாரம் பண்ணி வாக்குரிமைய கூட்டிக் கொடுக்க எங்களை என்ன மானங்கெட்ட தமிழன்னு நினைச்சீங்களா ?
இல்ல ஒட்டு போட்ட மக்களுக்கே வேட்டு போட நாங்க என்ன தமிழ்க் அரசியல்வாதியா ?

என்ன பேச்சு பேசறீங்க . நீங்க நிஜமாவே டில்லி சொல்லித்தான் வந்தீங்களா ?
டேய் தம்பி கோத்தா பய ... சோனியாவுக்கு போன் போடு .. பிரணாப் முகர்ஜிக்கு போன் போடு . .. எம் கே நாராயணனுக்கு போன் [போடு ....சிவசங்கர மேனனுக்கு போன் போடு .. ராகுல்காந்திக்கு போன் போடு ...
லைன் கிடைக்கலேன்னா , நேரா நம்ம கருணாநிதிக்கே போன் போடு . அதும் பிராப்ளம்னா ஈ விகே எஸ் இளங்கோவனுக்கோ , சோ ராமசாமிக்கோ ஒரு போன் போடுறா .
இந்த பொம்பள நிஜமாவே நம்ம ஆளுங்க சொல்லித்தான் வந்திருக்கான்னு .....

நிருபமா: (குறுக்கிட்டு ) இருங்க இருங்க அவசரப்படாதீங்க . அவங்க சொல்லித்தான் வந்திருக்கேன் .
இது எலக்ஷன் வரப் போற நேரம் . நீங்க பாட்டுக்கு சுட்டுக் கொல்லற ஆட்களோட பாடிய காட்டி அவங்க குடும்பங்களும் ஜனங்களும் 'அநியாயமா (!)" அழுது ஆர்ப்பாட்டம் பண்றாங்க . கலைஞர்காரு வேற தினசரி காலைல எழுந்ததும் பேஸ்ட் பிரஷோட அஞ்சு லட்ச ரூபா பணத்தையும் பக்கத்துல வச்சிக்கிட்டுதான் படுக்கையை விட்டே எந்திரிக்கிறார் . பயமா இருக்கு
என்ன பண்ணி தொலைக்கறது ? இந்தியாவுல தமிழனுக்கு இன்னும் ஓட்டுரிமை இருந்து தொலைக்குதே .அவனுங்க எங்களுக்கு எதிரா ஒட்டு போட்டுட்டா , அப்புறம் நாங்க ஜெயிக்க முடியாம போயிட்டா , நீங்க எப்படி தொடர்ந்து சுட முடியும் ?

உங்க மாதிரி நாங்களும் எப்பதான் இந்தியாவுல தமிழனுன்களோட ஓட்டுரிமையை ரத்து பண்ணப் போறமோ தெரியல . அப்புறம் உங்களை இப்படி தொந்தரவு செய்ய மாட்டோம் . அதுவரைக்கும் எங்களை மன்னிக்கணும்
அதனால தயவு [பண்ணி நீங்க சுடுற வேலைய ஒரு மூணு மாசம் நிறுத்தி வைங்க .
வேண்ணா மூணு மாசத்துல எத்தன பேரை சுடணும்னு கணக்கு பண்ணி வச்சுக்குங்க . தேர்தல் முடிஞ்சதும் மொத்தமா போட்டு தள்ளுங்க . எந்த பய உங்களை கேட்க இருக்கான் ? நம்ம அன்னைய 'பல்க்'கா சந்தோஷப் படுத்துங்க . யாரு வேணாம்னா ?

ராஜ பக்சே : அதான பாத்தேன் . நான் கூட உங்க எல்லாருக்கும் நிஜமான இந்திய தேசப் பற்று வந்துடுச்சோன்னு பார்த்தேன் .

நிருபமா : கொஞ்சம் மனசு வைங்க ராஜா .

ராஜபக்சே : புரியுது நிரூ . என்ன பிரச்னைன்னா , நாங்க தமிழன சுட்டு பொணமா அனுப்பும்போது அதைப் பார்த்து அவன் பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் அழுறத பாக்குறதுல ஒரு சந்தோசம் . அந்த சந்தோசம் மூணு மாசம் இல்லாம போற சோகத்தை நினைச்சு என் சிங்கள இனமே கண்ணீர் வடிக்குமே

பரவா இல்ல . ஆனா ஒண்ணு அங்க உள்ள நம்ம ஆளுங்க கிட்ட ஒரு விசயத்தை சொல்லிடுங்க . தமிழன சுட்டுக் கொல்லாம எல்லாம் இருக்க முடியாது . நீங்க கொடுத்த ஆயுதமே இன்னும் நிறைய இருக்கு . அதெலாம எப்ப யூஸ் பண்றது? வேண்ணா ஒண்ணு பண்றோம் . பாடியை அப்படியே விட்டுட்டு வராம இங்க கொண்டு வந்து எரிச்சுகறோம் . ஆனா அதுக்கு பெட்ரோல் செலவு எல்லாம் இந்திய கடல்படைதான் தரணும். டீல் ஒகே வா ?

நிருபமா ; டபுள் ஒகே . மீனவர்கள் காணவில்லைன்னு நியூஸ் வர வச்சு அப்படியே மறக்க அடிச்சுடலாம். கவனம் ......பாடி கிடைக்கவே கூடாது சரியா ?

ராஜபக்சே :. ஓகே ஓகே

நிருபமா ; சும்மா சொல்லக் கூடாது . கில்லாடி சார் நீங்க .
ராஜபக்சே : இல்லன்னா வல்லரசு நொல்லரசுன்னு ஊள உதார் விடற உங்கள நொண்டி நொங்கெடுத்து , என் காலைக் கழுவி குடிக்க வைக்க முடியுமா ? புத்தம் சரணம் கச்சடா ..
நிருபமா ; சார் அது கச்சாமி சார் .
ராஜபக்சே ; அத விடுங்க . எனக்கு ஒரு டவுட்..! நாங்க உங்க இந்தியாவோட தென் எல்லை மீனவர்களை தமிழக மீனவர்கள் அப்படின்னு சொல்றோம் . ஆனா நீங்களும் அவர்களை இந்திய மீனவர்கள் என்று சொல்லாம தமிழக மீனவர்கள் அப்படின்னே சொல்றீங்களே . அவங்க உங்க இந்திய மீனவர்கள் இல்லியா ?

நிருபமா ; என்ன சார் இது ... இப்பதான் உங்கள கில்லாடின்னு சொன்னேன் . இப்படி உளர்றீங்க . நாங்க தமிழர்களை இந்தியர்களா நினைக்கவே மாட்டோம் . ஆனா அவங்க மட்டும்" நாங்க இந்தியர்கள் நாங்க இந்தியர்கள்" னு நினைக்கணும் . அதான் இந்தியா

ராஜபக்சே ; (மெய்சிலிர்த்து கண் கலங்கி உணர்ச்சிவசப்பட்டு ) ஜெய்ய்ய் ஹிந்த்த்த்!

அசோக்,

நல்ல கற்பனை வளத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை, இது முழுதும் கற்பனைதான் என்று ஏற்கவும் மனம் ஏனோ மறுக்கிறது.
சமீபத்தில் முகமது என்ற ஒரு துனிசிய இளைஞன் தன்னைத் தீயிட்டு மாண்ட போது, அந்தத் தீ நாட்டில் புரட்சியாய் மலர்ந்து புதிய அரசு ஆட்சிக்கு வந்தது .
http://meenakam.com/2011/02/02/20288.html
முள்ளி வாய்க்காலில் நம் சொந்தங்கள் பதுங்கு குழிகளில் உயிருடன் புதைக்கப் பட்ட போது, துயரம் தாளாது முத்துக்குமார் தொடங்கி எத்தனையோ தமிழர்கள் தங்களை எரித்துக் கொண்ட போதும், உறக்கத்திலிருந்து நம்மை யாராலும் எழுப்ப முடியவில்லையே..?

உயிரோடு பிணமாய் வாழும் இனம், இவ் வுலகில் நம் தமிழ் இனம் மட்டும்தான்.

அயலவன் ஆள்வதற்கா - உன்னையே

அடகுவைத் தாயடா நீ ..?

செயல்வழி மறந்தாயா? - தன்மானம்

செத்தபின் பிறந்தாயா?

நம்மையே நாம் உணர்ந்தால் - தமிழனே

நாளையே விடிவு வரும்

உம்முடை விழி சிவந்தால் - நிச்சயம்

உன்னத முடிவு வரும்.

வெல்க தமிழ் ஈழம்.

அன்புடன்,
மணி