Monday, June 28, 2010

ஹெட் லைட்டை லோ பீமில் போடுவதே இல்லை

நானும் ரொம்ப காலமா கவனிக்கிறேன், நம்ம ஊர்லே படிச்சவன் படிக்காதவன் எல்லோருமே கார், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெட் லைட்டை லோ பீமில் போடுவதே இல்லை. நகர சாலைகளில் லோ பீம் இல் தான் வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என்ற விதி படிக்காதவனுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். (ஓட்டுனர் உரிமத்தை நாம் காசு கொடுத்து வாங்கும் வரை இப்படித்தான் இருக்கும்) நன்றாக படித்து லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் அறிவு ஜீவிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள். நானும் பலமுறை டிம் டிப் போட்டுக்காட்டி வெறுத்து போய் ஹை பீம்லியே வாகனத்தை ஓட்ட ஆரம்பித்து விட்டேன். ஊரோடு ஒத்து வாழ்வதென்பது இதுதானோ? நல்ல நாடு நல்ல மாக்கள் சாரி மக்கள். இன்னும் 100 ஆண்டுகள் சென்றாலும் நாம் திருந்துவோமா என்பது சந்தேகமே.

Sunday, June 27, 2010

Education is the most powerful weapon

"Education is the most powerful weapon you can use to change


the world” - Nelson Mandela
 
ம் ம் ம் ம் ம் ம் ம் இதெல்லாம் இந்தியாவுக்கு சாத்தியப்படாது என்பது உண்மையாகிறது.


சென்ற மாதம், சென்னை, அண்ணா நகரில் காரில் சென்றுகொண்டிருக்கும் போது, பின்னால் ஒருவர் சும்மாவே அவரது காரில் ஹாரன் அடித்துகொண்டே வந்தார். எனக்கு வந்த கோபத்தில் ஏனய்யா இப்படி என்று கேட்டதுக்கு எனது கார், எனது ஹாரன் அப்படித்தான் அடிப்பேன் என்றார் அந்த மானம் கெட்ட படித்த முட்டாள். (இள வயதுக்காரரும் இல்லை) அரசு இங்கே ஹாரன் அடிக்கக்கூடாது என்று சில பகுதிகளில் குறிப்பிட்டு இருக்கும். அப்படி என்றால் அப்படி சொல்ல அரசுக்கு உரிமை இல்லையா? இவர்கள் மருத்துவமனை, பள்ளிகூடங்கள் பகுதியிலும் இப்படித்தான் இருப்பார்களா? அது இருக்கட்டும். இவர் மனைவிதான் என்பதால் சாலையில் எல்லோரும் பார்க்க குடும்பம் நடத்துவாரோ? இந்தியாவின் பல பகுதிகளில் இப்படித்தான் நடக்கிறது. இந்த அறிவுக் கொழுந்துகளும் ஓட்டு போட்டு நமது ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு விதத்தில் படிக்காதவர்கள் இவர்களுக்கு மேல் என்று தோன்றுகிறது..

ரகுபதி ராகவ ராஜாராம்......

நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி.....

Saturday, June 19, 2010

நாமும் நம் நாடும் எங்கே போய்க் கொண்டிருக்கிறது

நேற்று சென்னையில் சாலையில் போய் கொண்டு இருக்கும் போது எக்மோர் பாலத்தில் ஒரு ஆட்டோவிலிருந்து தெர்மொ கப் ஒன்று சாலையில் வந்து விழுந்தது. கொஞ்சம் வேகம் எடுத்து ஒரு ஆர்வக் கோளாரில் யார் என்று பார்க்கலாம் என்று ஆட்டோவை கடந்தேன். அதில் அருகில் உள்ள ஒரு நல்ல உயர்ந்த ஆங்கில பள்ளியின் மாணவர்கள் 4/5 பேர். இவர்கள் பின்னர் அண்ணா பல்கலைகழகத்திலேயோ, ஐ ஐ டியிலோ படித்து விட்டு அமெரிக்கா போய் விட்டு இந்தியாவா அசிங்கமான நாடு நாங்கள் அங்கேயெல்லாம் வரமாட்டோம், எங்கள் பிள்ளைகள் கெட்டு போய் விடுவார்கள் என்று கதை பேசுவார்கள். இவர்களுக்கு பள்ளிகளிலும் சுத்தம் சுகாதாரம் கற்றுத் தருவதில்லை. வெறும் புத்தக பூச்சியாக்கி அனுப்பி வைக்கிறார்கள். இதையெல்லாம் நினைத்து பார்க்க யாருக்கு நேரமிருக்கு?


நாமும் நம் நாடும் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பது விளங்காத புதிராக இருக்கிறது. நாம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் அரசியல்வாதிகள் சிறப்புடன் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நாட்டை பற்றி எந்த கவலையும் இல்லை. நம்மைப் போன்ற பொது மக்களும் நமக்கென்ன என்று இருந்தால் அடுத்து சீனாக் காரன் நம் நாட்டை பிடித்தாலும் கேக்க ஆள் இருக்காது. அன்பர்களே இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது நிச்சயமாக நடக்கத்தான் போகிறது. நமது அரசியல் வாதிகளும் அவர்களிடமே கையூட்டு வாங்கிக் கொண்டு நன்றாக வாழத்தான் போகிறர்கள்.

Friday, June 18, 2010

சென்னையின் அறிமுகம்

சென்னையின் அறிமுகம்:
நான் பொதுவாக எனது rotation work style காரணமாக ஒவ்வொரு மாதம் முடிவிலும் சென்னை வருவதால் cabin luggage மட்டுமே கொண்டு வருவேன். இந்த முறை தவறுதலாக கனமான    luggage உடன் வந்துவிட்டேன். சென்னை airport இல் conveyer இல் கொஞ்சம் நேரம் நிற்க வேண்டியதாகிவிட்டது. அப்போதுதான் கவனித்தேன் அந்த பகுதி முழுவதும் சுவர் மூலைகளில் எல்லா இடத்திலும் paan barag   எச்சில் கறை. இது நிச்சயமாக அதி காலையில் வந்திறங்கும் பயணிகள் வேலையில்லை. அங்கே வேலை செய்யும் ஊழியர்கள்தான் நினைத்த இடத்தில், நின்ற இடத்தில் எச்சில் துப்பி அசிங்கம் செய்து வைக்கின்றனர். இதை அங்கிருக்கும் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எத்தனை வெளி நாட்டினர் வந்து போகுமிடம்? முதலில் சென்னை வந்து இறங்கியவுடன் நம் கண்ணில் படும் இந்த அசிங்கமே இவர்களுக்கு உறைக்கவில்லை என்றால் வெளியில் சாலைகளிலும் பொது இடங்களிலும் இவர்களும் இவர்களின் மற்றத் தமிழ் சகோதரர்களும் இறைக்கும் எச்சில் கோலத்தை எங்கே போய் சொல்லுவது? இவனுங்கள்ளெல்லாம் எப்போது திருந்த போகிறார்கள். நாம எதாவது சொன்னால் கச்சை கட்டிக் கொண்டு கூட்டம் சேர்த்து மல்லுக்கு நிற்கத்தான் தெரியும்.