நேற்று சென்னையில் சாலையில் போய் கொண்டு இருக்கும் போது எக்மோர் பாலத்தில் ஒரு ஆட்டோவிலிருந்து தெர்மொ கப் ஒன்று சாலையில் வந்து விழுந்தது. கொஞ்சம் வேகம் எடுத்து ஒரு ஆர்வக் கோளாரில் யார் என்று பார்க்கலாம் என்று ஆட்டோவை கடந்தேன். அதில் அருகில் உள்ள ஒரு நல்ல உயர்ந்த ஆங்கில பள்ளியின் மாணவர்கள் 4/5 பேர். இவர்கள் பின்னர் அண்ணா பல்கலைகழகத்திலேயோ, ஐ ஐ டியிலோ படித்து விட்டு அமெரிக்கா போய் விட்டு இந்தியாவா அசிங்கமான நாடு நாங்கள் அங்கேயெல்லாம் வரமாட்டோம், எங்கள் பிள்ளைகள் கெட்டு போய் விடுவார்கள் என்று கதை பேசுவார்கள். இவர்களுக்கு பள்ளிகளிலும் சுத்தம் சுகாதாரம் கற்றுத் தருவதில்லை. வெறும் புத்தக பூச்சியாக்கி அனுப்பி வைக்கிறார்கள். இதையெல்லாம் நினைத்து பார்க்க யாருக்கு நேரமிருக்கு?
நாமும் நம் நாடும் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பது விளங்காத புதிராக இருக்கிறது. நாம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் அரசியல்வாதிகள் சிறப்புடன் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நாட்டை பற்றி எந்த கவலையும் இல்லை. நம்மைப் போன்ற பொது மக்களும் நமக்கென்ன என்று இருந்தால் அடுத்து சீனாக் காரன் நம் நாட்டை பிடித்தாலும் கேக்க ஆள் இருக்காது. அன்பர்களே இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது நிச்சயமாக நடக்கத்தான் போகிறது. நமது அரசியல் வாதிகளும் அவர்களிடமே கையூட்டு வாங்கிக் கொண்டு நன்றாக வாழத்தான் போகிறர்கள்.
No comments:
Post a Comment