சென்னையின் அறிமுகம்:
நான் பொதுவாக எனது rotation work style காரணமாக ஒவ்வொரு மாதம் முடிவிலும் சென்னை வருவதால் cabin luggage மட்டுமே கொண்டு வருவேன். இந்த முறை தவறுதலாக கனமான luggage உடன் வந்துவிட்டேன். சென்னை airport இல் conveyer இல் கொஞ்சம் நேரம் நிற்க வேண்டியதாகிவிட்டது. அப்போதுதான் கவனித்தேன் அந்த பகுதி முழுவதும் சுவர் மூலைகளில் எல்லா இடத்திலும் paan barag எச்சில் கறை. இது நிச்சயமாக அதி காலையில் வந்திறங்கும் பயணிகள் வேலையில்லை. அங்கே வேலை செய்யும் ஊழியர்கள்தான் நினைத்த இடத்தில், நின்ற இடத்தில் எச்சில் துப்பி அசிங்கம் செய்து வைக்கின்றனர். இதை அங்கிருக்கும் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எத்தனை வெளி நாட்டினர் வந்து போகுமிடம்? முதலில் சென்னை வந்து இறங்கியவுடன் நம் கண்ணில் படும் இந்த அசிங்கமே இவர்களுக்கு உறைக்கவில்லை என்றால் வெளியில் சாலைகளிலும் பொது இடங்களிலும் இவர்களும் இவர்களின் மற்றத் தமிழ் சகோதரர்களும் இறைக்கும் எச்சில் கோலத்தை எங்கே போய் சொல்லுவது? இவனுங்கள்ளெல்லாம் எப்போது திருந்த போகிறார்கள். நாம எதாவது சொன்னால் கச்சை கட்டிக் கொண்டு கூட்டம் சேர்த்து மல்லுக்கு நிற்கத்தான் தெரியும்.
No comments:
Post a Comment