Friday, February 4, 2011

ஏ! தாழ்ந்த தமிழகமே...!

ஏ! தாழ்ந்த தமிழகமே...!


ஏதோ அரை மயக்கத்தில் வாக்களித்த ஒரு குற்றத்திற்காக..

முழுச் சுதந்தரத்தையும் அல்லவா இழந்துவிட்டு மூடர்களாகி நிற்கிறோம்.!

தன் வீடு, தன் பெண்டு, தன் பிள்ளை...என வாழ்ந்து,

இனமழியப் பார்த்திருக்கும் வீணர்களை விரட்டியடிக்கும் நேரமிது.

வீழ்ந்து விட்ட இனத்தின் இருளகற்ற,

விடியலின் ஒளிக்கீற்றை தன் தோளிலே சுமந்து...

தன்மானம் காக்க வரும் தலைவனின் திசை நோக்கி

இதோ..

காத்து கிடக்கிறது தமிழகம் ..


இது என் நண்பர் மணி அவர்களின் கடிதம்.

மணி சார்,

யாரந்த தலைவன்? ஜெயாவா? விஜயகாந்தா? சரத்குமாரா? கார்த்திக்கா? ராதிகாவா? சீமானா? விஜையா? குஷ்புவா? ரித்தீஷா? ராமராஜனா?  பாருங்கள். இந்த கேடுகெட்ட தமிழ் சமுதாயத்தை. அரிதாரம் பூசி சினிமாவில் அக்கிரம்களை தட்டிக் கேட்டு, ஒரே கதா நாயகன் 50 பேரை வெறும் கையால் வீழ்த்தும் இவர்கள் தான் நமது தமிழகத்தின் எதிர் கால நட்சத்திரங்கள். இவ்வளவு தீரமிக்க வீரமிக்க காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள், உதாரணமாக, விஜை,  அவர் படத்திற்க்கு தடங்கள் வந்த போது அவர் தியேட்டரில் புகுந்து எல்லோரையும் அடித்து துவம்சம் செய்து தன் படத்தை திரையிட்டிருக்கலாமே. ஏன் இந்த ஆட்டம்? ஏன் இவர்கள் தெய்வமாகிறார்கள்? எல்லாவற்றுக்கும் காரணம் அறிவிலியான இந்த தமிழந்தான். விஜயகாந்த் அழைக்கிறார் என்றால் ஒரு தரிதர்யம் பிடித்தக் கூட்டம், கருனா நிதி அழைக்கிறார் என்றால் ஒரு மானம் கெட்ட கூட்டம், ஜெயா அழைக்கிறார் என்றால் ஒரு ஈனமற்ற கூட்டம் என்று இப்படி கூடுகிறார்கள். இவர்களுக்கு வேறெ வேலை வெட்டியே இருக்காதா என்று ஒரு மலேஷிய தமிழர் கேட்ட போது அவமானத்தில் தலை குனிவது தவிர வேறொன்றும் எனக்கு தெரியவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் இலவசமாக பெற்றுக் கொள்கிறோம். எங்களுக்கு வேலையே இவர்கள் கூட்டத்துக்கு போவது மற்றும் அலுக்காமல் சளைக்காமல் பிள்ளைகளைப் பெற்று போடுவது மட்டும்தான் என்று நமக்கு தெரியும். (எதிர்காலத்தில் பிள்ளைகளையும் இலவசமாக பெற்றுத் தந்தால்  நம் தமிழனுக்கு 
சந்தோஷமே) அதை அவர்களிடம் சொல்ல முடியுமா? காறித் துப்புவார்கள். அப்புறம் அவர்களும் தமிழ் நாட்டில் இந்த தமிழன் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன என்று நினைப்பான். இந்த 21 ஆம் நூற்றண்டிலும் நமது வீரமிக்க, மிக பழைய உயர்ந்த கலாச்சாரம் கொண்ட தமிழ் சமுதாயம் இந்த யோக்கியர்கள் மீதுதான் நம்பிக்கை கொண்டுள்ளது. இப்படி இருக்கையில் தமிழன் உருப்படுவான் என்ற நம்பிக்கை எப்படி வரும்? இவர்கள் பின்னால் பன்றிக் கூட்டமாக அலையும் தமிழன் செத்தால் என்ன என்று மத்திய அரசு நினைப்பதென்ன எனக்கும் அதுதான் தோன்றுகிறது. நமது தமிழனுக்கு கொஞ்சமாவது சூடு சொரனை இருக்கனுமே?

No comments:

Post a Comment